Madhumitha profile
Creator Profile

Madhumitha

Writer

43 Posts
41 Followers
0 Following
M
Madhumitha
Quote by Madhumitha - மறக்க இயலாமல்
மறைக்க விழைகிறேன்,
மறந்தும் மறவா உன் நினைவுகளை!
விளைவு, கனவில் உன் நினைவுகள்
அதிகரிப்பதே மிச்சம்!!~மீளா உன் நினைவில்~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - விழிகளே விடை பேசுகையில்.... 
வீன் வினா ஏனோ தோழா?  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - இரவு எட்டிப் பார்க்கும் நேரம்!
பேருந்தை எட்டிப் பார்த்தப்படி ஒரு நிழற்குடையில் நான்!!
பொழியும் மழையில் வெண்குடை ஒன்று என்னை நோக்கி வர... 

 
குழம்பினேன் ஒரு கணம்! "(நிழற்)குடைக்குள் வந்ததோ மழை, 
கையில் குடை ஒன்றை ஏந்தி?"~குடைக்குள் மழை~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - விழியில் வினா நூறு ஏந்தி...
முயன்றும் மொழிந்திடா நிலையில்,
தொடங்கியது ஒரு காதல்...
ஒரு கோப்பை தேநீருடன்! ~ஒரு கோப்பை காதல்~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - We came alone!
We leave alone!
Why can't we live alone?
Let's give it a try...  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - கனவுக்குள்ளே கனவாய் வந்து கண்ணெல்லாம் வியர்க்கிறதே!
புயலும் இன்று தென்றலாய் மாறிட
காற்றில் கண்ணீர் கலக்கிறதே.!! - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - அலைபேசி சிணுங்கலில்
சிதறுது கவனம்!
அழைப்பது நீயென பதறுது உள்ளம்.!! - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - முடிந்து போன உறவே!
உன்னை கடந்து போக
வழி சொல்லாயோ?  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Why am I expecting a bloom in a withered plant?  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - வெள்ளை காகிதத்தில் வரைந்த ஓவியம் ஒன்றை...
வண்ணம் தீட்டிய வரை கோல் அவள்!
அவள் வரைந்து மறந்து போகலாம்! 
மறந்தும் மறவா அவள் நினைவில்...

                                                              நான், 
                                                            ஓவியம்.  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

M
Madhumitha
Quote by Madhumitha - நடந்தும் நகரா காலுடன்... 
உரையாட ஊமையான இதழுடன்... 
ஓரமாய் நான்! தூரமாய் நீ!!
 - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Dear passing cloud,
           
           I'll not blame u for passing me!
          I'm happy u've showered some happiness 
           in my drought life!

                                           With love,
                                          Drought land - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - It's never too late 
to start - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - விதியின் வசம் நீயும்... 
விடை தெரியாமல் நானும்! 
மதியில்லா நேரம்... 
இருள் சூழ்ந்த வானும்! - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - ஆறுதலாய் நீயும் பேசுகையில்... 
ஆறு கடல் வற்றிடுதே
கண்ணில்!!! - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - இரு இதழின் வளைவில் 
கொஞ்சம் வளையுது
இளையவள் நினைப்பு! 
அரிதான பலரும் அறியாத
அத்திப் பூ அவன் சிரிப்பு!!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - You never know 
when your last bye 
will be!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - கண்ணில் காணா காட்சிகளை
உன்னில் காணும் ஆசையிலே.... 
உன்னை நானும் குவித்திடவே.... 
பல நினைவுகள் எனக்கு குவிக்கின்றாய்! ~படமி~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Hostel room is a place where
Tears and smiles merge when
Friendship emerge!~Roommates~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - துவண்டு போனேன்! 
தோழனாய் தோள் தந்தாய்!
கவலையில் இருந்தேன்! 
காதலனாய் கண்ணீர் துடைத்தாய்! 
வாரத்தின் அங்கமாய் உன்னை எண்ணும் வேளையில்.... 
வாழ்க்கையின் அங்கமாய் மாறி போனாய்! ~கவிதையும் நானும்~ - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

M
Madhumitha
Quote by Madhumitha - அன்று அழ வைத்து பார்த்த உறவு, 
இன்று கண்ணீரில் ஆறுதல் கூறுது! 
அறியா வயதில் தெரியாமல் போன நேசமே! 
பிரியும் நேரம் புரியுது உன் பாசமே!~அக்கா தம்பி~
~அண்ணன் தங்கை~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - வாடைக் காற்றை வாடகைக்கு வாங்கி, 
காதல் கானம் தூது அனுப்பினேன்... 
உன் அழகில் மயங்கியே! 
மொட்டைமாடி நிலவே!!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - My lightning typing /speaking skill finds it difficult to find a single word to respond u! Crush? Love?  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - தோலும் சுருங்கி எலும்பை தொட்டிட... 
வயிற்றின் ஓசை காதை எட்டிட... 
வயிறு வற்ற ஓடுவார் மத்தியில், 
வற்றிய வயிறுடன் சோற்றுக்கு நடக்கும் கால்கள்!! ~வறுமை~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - காத்திருப்பேன்.... 
பகலவன் ஆட்கொள்ளப் பனித்துளியாய்! 
வெண்ணிலா காண இருள்வானாய்! 
கரை விளக்குக் காண கடற்படகாய்! ~காத்திருப்பேன்~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - மலர்ந்து மணம் வீசும் செடியை கண்டு ரசித்த ஆயிரம் கண்கள் இங்குண்டு! 
கொடிக்குப் பாசநீர் வார்த்து பக்குவம் செய்த வேரைக் கண்டார் இங்குண்டோ? ~அம்மா~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - காதல் பேச ஊமையாய் போன உதடுக்கு, 
ஆறுதல் கூற ஆயிரம் துளிகள் கண்ணில் கிளம்ப, 
குறுக்கிட்டது கன்னம் தன்னோடு கூட்டிச் செல்ல!!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - வாழ்க்கை வீடு தாழிட்டுப் போனாலென்ன! 
திறவுகோல் கையில் இருந்தும், 
திறக்கும் திறமை இருந்து‌ம், 
தயக்கமேனோ தோழா??  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - உதிரும் இலையும் இங்கு உரமாகிடவே! 
உடைந்த கண்ணாடியும் பல பிம்பம் காட்டிடவே! 
உடைந்த மணிக்காட்டியும் இருமுறை சரிவர மணிக்காட்டிடவே! 
உடைந்த மனமே உன்னால் மீண்டெழ முடியாதோ?? ~உடைந்த மனமே~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - முத்து முத்து மழையை முத்தமிடவே! 
சத்தம் கித்தமில்லா காற்றை வடித்து, 
பிடித்த வண்ணம் தீட்டிடவே! 
மின்மினி யெல்லாம் விண்மீனாகிட
விண்மீனெல்லாம் வான்மதி ஆகிடவே! 
ஆசை ஆசை இன்னும் நூறு பேராசை! 
பேராசையெல்லாம் நிராசை ஆகிடவே, 
முளைக்குது மனதில் இன்னொரு குட்டி ஆசை!!  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

M
Madhumitha
Quote by Madhumitha - நெடுந்தூர ரயில் பயணத்தில், 
எதிர் சாளரப் பயணி நீ!
ஏனோ சந்தித்தோம்...தானாய் வந்த நட்புடன்!
உன் நிறுத்தம் வந்து இறங்கிவிட்டாய்!
நிறுத்த இயலாமல் நகருது என் பயணம்,
நானறியா என் இலக்கை நோக்கி!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - கல்லாய் போன நெஞ்சிலும்
கொஞ்சம் காதல் கசியும்
உன்னை கண்ட பின்!~சீதா ராமம்~ - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - தயக்கம் கலந்த பயமும்,
பயம் கலந்த குழப்பமும்
கேள்வி அலைகளாய் தன் மனக்கரையை மோத,
தன் கனவுக்கோட்டையை காக்கப் போராடும் பெண் ஒருத்தி!!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - மீளா உன் நினைவில் 
நீளும் என் இரவுகள்!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Sadness is seeing ur bestfriend enjoying their own life without u!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Dear human, 
       
       By missing the past me, 
       You r losing the present me.
       And ur future me might be lost forever! 
                                              
                                                With love, 
                                                Your time.  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - கூறும் நேரம் இந்த உறவு மாறுமோ? 
வெவ்வேறு பாதை தேடிட நேருமோ? 
கண்ணில் காணும் நட்பால், 
மனதில் கொண்ட காதல் கனவில் கலந்திடவே!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - It's ok to be pessimistic sometimes, 
You can prepare for the worst-case! 
It's ok to be the last person sometimes, 
You can gain the experience of preceding ppl! 
It's ok to be not beautiful for many, 
You will be, for the correct person! 

Its ok to not be ok!!! 
 - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - Dear little girl/boy, 
         
            You are matured! 
          The cried moments bring smile on your face n 
          The most enjoyed moments bring tears in your     
                                                                             eyes!
          Yes, you are matured!! 

                                                              With love, 
                                                      Your little heart. 
 - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - நீலத் தரை ! 
அதன் மேல் போர்த்திய வெள்ளித் திரை !
திரைக்குள் கூட்டமாய் ஒளிந்து கிடக்கும்         
                                                          மின்மினி ! 
மின்மினியெல்லாம் பொறாமை கொள்ளும்   
                                                  என் கண்மணி !!  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

M
Madhumitha
Quote by Madhumitha - Just fight for it! 
Even if u lose, 
It will give u peace!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - அன்று கன்னம் தீண்டினாய், 
இதயம் துடிதுடித்தது! 
இன்று கன்னம் தீண்டுகையில், 
இதயம் தூள் தூளாய் போனது! 
உன் முத்தம் பதிந்த இடத்தை 
நீ தந்த கண்ணீர் சுத்தம் செய்வதால்!!  - Made using Quotes Creator App, Post Maker App
M
Madhumitha
Quote by Madhumitha - வெள்ளைக் காகிதமாய் நீ வாழ்ந்தாலும், 
அதில் கரும்புள்ளி தேடும் சமூகம் இது! 
கறையை களைவதை விட்டுவிடு! 
வெண்மையை விரிவாக்கப் பழகிவிடு!!  - Made using Quotes Creator App, Post Maker App